ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான ரஜினி செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, நகர செயலாளர் பாபு சிவக்குமார், அவைத்தலைவர் தணிகை குமரன், பொருளாளர் கதிர்வேல், தீபக், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, மணிமேகலை மணி, அபிபுன்னிஷா சாதிக் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.