பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

பாப்பாரப்பட்டியில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-17 18:45 GMT

பாப்பாரப்பட்டி பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் இமானுவேல் வரவேற்று பேசினார். இளைஞரணி மாவட்ட தலைவர் மவுனகுரு, கல்வியாளர் பிரிவு தலைவர் காவேரிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பா.ஜ.க. மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் கலந்து கொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் தெய்வமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவசக்தி, ஆறுமுகம், சிவக்குமார், முருகன், வக்கீல்கள் கீர்த்திவர்மன், ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாநில இளைஞர் அணி செயலாளர் புவனேஸ்வர், நிர்வாகிகள் கணேசன், லட்சுமி சதாசிவம், குட்டி, சிவக்குமார், மகளிரணி லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் சுதா பரிமளன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்