மத்தூர், போச்சம்பள்ளியில் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா
மத்தூர்
மத்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார தலைவர்கள் தனஞ்செயன், மாது ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை தலைவர்கள் ராமன், லோகநாதன், வெங்கட்டபதி, ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியின் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பஸ் நிலையத்தில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகேசன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சபாபதி, ஜமால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாதேஷ் குமார், பேச்சாளர் முனுசாமி நாயக்கர்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் போச்சம்பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், மனோகரன், ஆர்.டி.ஐ. மாவட்ட தலைவர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கெரிகேப்பள்ளி கேட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவில் கஞ்சனூர் கேசவன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.