பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT

கோவில்பட்டி:

மாவட்டம் முழுவதும் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் புதுகிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர அவைத்தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பீட்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர், மாநில செயற்குழு குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் மெயின் பஜாரில் அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் உருவப்படத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் எம்.பி.முருகானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய கிழக்கு செயலாளர் ஏ.பி.சதீஷ்குமார், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர் ராம்குமார், விவசாய அணி துணை அமைப்பார்கள் கோபி, லிங்க பாண்டியன் மேல ஆத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல ஆத்தூர் பஞ்சாயத்து சார்பாக தெற்கு ஆத்தூர் மெயின

Tags:    

மேலும் செய்திகள்