திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா

திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-05 19:48 GMT

வத்தலக்குண்டுவில், சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சுப்பிரமணிய சிவா நற்பணி நலச்சங்க தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் ஜெர்மன் ராஜா, பொருளாளர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் சுப்பிரமணிய சிவாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் கோபால், காமாட்சி, மருது ஆறுமுகம், செல்லப்பாண்டி, லட்சுமி நாராயணன், குமார், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசிய பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரின் பிறந்தநாள் விழா திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆலோசகர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சுப்பிரமணியசிவா, திருப்பூர் குமரன் மற்றும் சிவாஜிகணேசன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரவை நிறுவனர் வைரவேல், மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன், மாநகர துணை தலைவர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்