தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாட்டம்-உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி, மரியாதை செலுத்தினர்.
நூற்றாண்டு நிறைவு விழா
தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி.சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பொன் மகேஸ்வரன், வக்கீல் தாஸ், ரவி, ராஜா, குமார், கவுசல்யா, நகர அவை தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமலவள்ளி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் சுருளிராஜன், கனகராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், மாதேஸ்வரன், வக்கீல் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்
இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காரிமங்கலத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ.மணி, ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
விழாவையொட்டி பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கோபால், கிருஷ்ணன், அன்பழகன், நகர செயலாளர் பி.கே.முரளி, வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தனக்கோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு
பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு பேரூர் தி.மு.க. செயலாளர் பி.கே.முரளி தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட பொருளார் முருகன், நகர அவைத்தலைவர் அமானுல்லா, மாவட்ட விவசாய அணி தலைவர் ரவி, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பழகன் உருவப்பட்டத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் பேரூர் துணைத் தலைவர் இதயத்துல்லா, வக்கீல் இளவரசன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்திவேல், வகாப்ஜான். மோகன், பத்தேகான், ஜெயந்தி மோகன், சாதிக்பாஷா, சரவணன், ரோஹித், லட்சுமி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரண்டஅள்ளி
மாரண்டஅள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி, முன்னாள் நகர செயலாளர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதர், வெங்கடேசன், சத்யா சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.