தர்மபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா-பொதுமக்கள்-மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Update: 2022-11-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி பகுதியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளையொட்டி பொதுமக்கள், மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

தர்மபுரி பகுதியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி செந்தில் நகரில் உள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், நகர அவைத் தலைவர் அழகு, நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், கோமலவள்ளி ரவி, அன்பழகன், நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், ஜெகன், ராஜா, சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் ரவி, காசிநாதன், ரஹீம்,சந்திரமோகன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், சப்தகிரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள் முருகவேல், பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். விழாவையொட்டி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

காது கேளாதோர் பள்ளி

தர்மபுரி நகர தி.மு.க. சார்பில் 33 வார்டுகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி-சேலைகள், மாணவ-மாணவிகளுக்கு எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பிடமனேரியில் உள்ள விவேகானந்தா காது கேளதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்