பரிதிமாற் கலைஞரின் சிலைக்கு கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
பரிதிமாற் கலைஞரின் 153-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே பரிதிமாற் கலைஞரின் 153-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனர்.
பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்
தமிழ் மொழியை செம்மொழியாக்கவேண்டும் என்று முதல் முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். இவர் தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்டதால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற சமஸ்கிருதத்தில் இருந்த தனது பெயரை செம்மொழியில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி கொண்டார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி அக்ரஹாரம் தெருவில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த வீட்டை பழமை மாறால் புதுப்பித்து நினைவு இல்லம் உருவாக்கப்பட்டது. அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவர் எழுதிய புத்தகங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ேநற்று பரிதிமாற்கலைஞரின் 153-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் பரிதிமாற் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மரியாதை
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி, மதுரை மேற்கு தாலுகா தாசில்தார் கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், விளாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலர் ராஜமாணிக்கம், தி.மு.க. வட்ட செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பரிதிமாற் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர்கள் பாலமுருகன், பொன்முருகன், எம்.ஆர்.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமையில் மாநகராட்சிகவுன்சிலர்கள் உசிலை சிவா, விஜயா, நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி தலைவர் ஆறுமுகம், செயலாளர் மருதமுத்து, பாசறை மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோரும், ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் அய்யல் ராஜூ ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செம்மொழி நாளாக
அதே போல பரிதிமாற்கலைஞரின் பேரன்கள் கோவிந்தன், வெங்கட சுந்தரம், சீனிவாசன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், பரிதிமாற்கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக அறிவித்து போற்றப்பட வேண்டும் என தமிழக அர சை வலியுறுத்துகிறோ ம். மே லும் பரிதிமாற்கலைஞர் நினை வு இல்ல சா லை யை மேம்படுத்த வே ண்டும். விளா ச்சேரி மற்றும் பசுமலை மூலக்கரை அரு கே வி ளாச்சேரி பிரிவு சா லையில் பரிதிமாற்கலைஞர் நினை வு இல்ல நுழை வு வாயி ல் அ மைக்கப்பட வே ண்டும் என்றனர்.