பறவைகளை வேட்டையாடியவர் கைது

பறவைகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-18 19:00 GMT

நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தில் வயல்வெளி பகுதிகளில் நேற்று முன்தினம் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்றனர். அவர்களை கண்டவுடன் 2 பேர் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் நாகை மாவட்டம் பாக்கம் கோட்டூர் பகுதியை சேர்ந்த நஜிபுதீன் (வயது53) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர், அனுமதி இல்லாமல் பயன்படுத்திய 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்