பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
பறவைகள் கணக்கெடுப்பு
பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் பறவைகள் ஆராய்ச்சியாளர் சிவக்குமார் தலைமையில் ஈர நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் வனச்சரகம், வேப்பந்தட்டை வனச்சரகம் மற்றும் சமூக வனச்சரகம் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கொக்கு, நாரை
துறைமங்கலம் பெரிய ஏரி, எழுமூர் ஏரி, குரும்பலூர் ஏரி, செஞ்சேரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் பெரிய ஏரி, அரும்பாவூர் பெரிய ஏரி, சித்தேரி, பூலாம்பாடி ஏரி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 30 வனத்துறையினர், 20 தன்னார்வலர்கள் என மொத்தம் 50 பேர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொக்கு, நாரை, நீர் குருவி, நீர் வாத்து போன்ற பல்வேறு வகையான பறவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியில் வனச்சரகர்கள் பழனிகுமார், சத்யா, மாதேஸ்வரன், வனவர்கள் குமார், பிரதீப் குமார், சுப்பிரமணியன், சக்திவேல், ஆனந்தன் உள்பட பலர் ஈடுபட்டனர்.