உயிர் உரம் பற்றிய செயல் விளக்கம்

உயிர் உரம் பற்றிய செயல் விளக்கம்

Update: 2023-02-09 16:17 GMT

உடுமலை,

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்து துறை அலுவலர்களும் பங்கு பெற்ற சிறப்பு முகாம் உடுமலையை அடுத்த வடபூதனம் மற்றும் மொடக்குப்பட்டி கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு அலுவலர் வைரமுத்து தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மைத்துறை கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

முகாமில் வேளாண் துறை சார்பில் உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தென்னை கருந்தலைப் புழு ஒட்டுண்ணி மற்றும் பிரக்கான் ஐய்டிஸ் ஒட்டுண்ணி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கால்நடைத்துறை சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி பற்றிய விளக்கம், கூட்டுறவுத்துறை சார்பில் சிறு குறு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குதல் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் உயிர் உரம் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்