சதுரகிரி கோவிலில் உண்டியல் உடைப்பு

சதுரகிரி கோவிலில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்தனர்.

Update: 2022-06-14 18:59 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பவுர்ணமியான நேற்று பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் உள்ள ஒரு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் சாப்டூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு தான் இந்த சம்பவம் குறித்த முழு விவரம் ெதரியவரும்.


Tags:    

மேலும் செய்திகள்