இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு
இரு தரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எலச்சிபாளையம்:-
எலச்சிபாளையம் அருகே பெரிய மணலி நால்ரோடு அருகில் கோக்கலை ரோடு செல்லும் வழியில் தனியார் பள்ளி வாகனம் வந்தது. அந்த வாகனம், தங்கமணி என்பவரது வீட்டு முன்பு நின்றது. உடனே தங்கமணி, பள்ளி வாகன டிரைவரை ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். அந்த வழியாக வந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தங்கமணியிடம் ஆபாச வார்த்தைகளை பேசாதீர்கள் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் தங்கமணி, அவருடைய மகன் பூபாலன், நண்பர் சேகர் ஆகியோர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.