இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-09 19:54 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவை சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் திருமாவளவன் (வயது 23). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தமிழரசனுக்கும்(21) இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழரசன், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமாவளவன், அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், ஜோதிமணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்