பிலால்கள் நலச்சங்க விழா
மேலப்பாளையத்தில் பிலால்கள் நலச்சங்க விழா நடந்தது.
தமிழ்நாடு பிலால்கள் நலச்சங்கம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் விருது வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது அலி கிராஅத் ஓதினார். செயலாளர் முகமது இப்ராகிம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் முகமது பிலால் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமாசபை தலைவர் காஜா முயீனுத்தீன், மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு, நெல்லை மாவட்டத்தில் ஒரே பள்ளிவாசலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள பிலால்களுக்கு விருதுகள் வழங்கினர். மேலும் பலருக்கு திருமண உதவி, மூக்கு கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
இதில் அலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் ஷாஹ் மதார் ஷாதுலி, நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமாசபை செயலாளர் ஜலீல் அகமது, பேராசிரியர்கள் ஷேக் அலி, அலி உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு பிலால்கள் நலச்சங்க மாநில பொருளாளர் சுலைமான் நன்றி கூறினார்.