புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இரு சக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ரமேசை (வயது 28) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், மொபட் என 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.