நாகர்கோவிலில் இருசக்கர வாகன பேரணி

குமரி பாலன் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து பிரம்மபுரத்துக்கு இருசக்கரவாகன பேரணி நடந்தது.

Update: 2023-08-08 20:17 GMT

நாகர்கோவில்:

குமரி பாலன் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து பிரம்மபுரத்துக்கு இருசக்கரவாகன பேரணி நடந்தது.

இருசக்கர வாகன பேரணி

சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்து முன்னணி நிர்வாகி குமரி பாலன் உயிரிழந்தார். அவருடைய நினைவிடம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரத்தில் அமைந்துள்ளது. அவருடைய நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் அவரது நினைவிடத்துக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறுவது வழக்கம்.

தெங்கம்புதூர்

இதேபோல் இந்த ஆண்டுக்கான நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதன்படி தெங்கம்புதூரில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியை என்.ஜி.ஓ.காலனி சந்திப்பில் வைத்து பா.ஜனதா பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான அய்யப்பன் தலைமையில் கொடி அசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலுக்கு பேரணி அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக என்.ஜி.ஓ. காலனி சந்திப்பில் குமரி பாலன் உருவ படத்திற்கு கவுன்சிலர் அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு கவுன்சிலர் வீரசூரபெருமாள், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஆசிரியர் கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜாகோவில் திடலில் இருந்து...

அதைத்தொடர்ந்து தெங்கம்புதூர், தோவாளை பகுதிகளைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் இருசக்கர வாகன பேரணி நாகராஜா கோவில் திடலை அடைந்தது.

பின்னர், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து வாகன பேரணி பிரம்மபுரம் நோக்கி புறப்பட்டது. பேரணியை குமரி மாவட்ட பா.ஜனதா பொருளாளர் முத்துராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகி காளியப்பன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன், பா.ஜனதா நிர்வாகி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

பின்னர், நாகராஜா திடலில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணி பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி, குமாரகோவில் வழியாக பிரம்மபுரத்தை சென்றடைந்தது. அங்கு குமரி பாலன் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஈத்தாமொழி

ஈத்தாமொழி சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் குமரி பாலன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் மார்த்தாண்டம் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணேசன், தணிகைகுமார், செல்வன், கோபாலன், தங்கம், ராகவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்