பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

வேப்பூர் அருகே பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-30 19:34 GMT

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடந்த நவம்பர், டிசம்பா் மாதம் பெய்த மழையால் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் ஏரியில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பூலாம்பாடி, காளியமேடு, அகரம், நிராமணி, லெட்சுமணாபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர். அப்போது மீன்பிடி வலைகளை பயன்படுத்தி பொதுமக்கள் போட்டிப்போட்டு கொண்டு ஆர்வமுடன் ஏரியில் மீன்களைப் பிடித்தனர். இதில் கெண்டை, விரால், ஜிலேபி போன்ற மீன்கள் அதிகளவில் கிடைத்ததாகவும், மீன்கள் ஒவ்வொன்றும் 5 முதல் 15 கிலோ வரை இருந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்