வாரச்சந்தை நடத்துவதற்கான ஏலம்
கந்திலியில் வாரச்சந்தை நடத்துவதற்கான ஏலம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடுகள் மண்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடத்திற்கான வாரச்சந்தை ஏலம் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் வேலூர் உதவி ஆணையாளர் நித்தியா, செயல் அலுவலர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஜெகதீசன், கஜேந்திரன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். முடிவில் ஆய்வாளர் அனிதா நன்றி கூறினார்.