பயன்படுத்துவதற்கு முன்பே உடைந்து போன சைக்கிள் பாகங்கள்

பயன்படுத்துவதற்கு முன்பே சைக்கிள் பாகங்கள் உடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-08-07 20:18 GMT


தஞ்சை தெற்கு வீதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் பல்வேறு பாகங்கள் உடைந்து போய் இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி நிர்வாகம் சைக்கிள்களை கொடுத்த உடனே சைக்கிளின் ஹான்பர், பெடல், சக்கரத்தின் கம்பிகள் போன்றவை உடைந்து போனதால் மாணவர்கள் சைக்கிள்களை எடுத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்