மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழா
தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முஜாமில்பாஷா, முன்னாள் தலைவர் சம்பங்கிராமரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அம்பிகா வரவேற்றார். விழாவில் 486 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல், அல்லாபகாஷா, சென்னீரா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.