நெகமம் அருகே ஆட்டோமீது ேமாட்டார் சைக்கிள் மோதல்-ஒருவர் படுகாயம்

நெகமம் அருகே ஆட்டோமீது ேமாட்டார் சைக்கிள் மோதல்- ஒருவர் படுகாயம்

Update: 2023-03-16 18:45 GMT

நெகமம்

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் (வயது 38). இவர் நேற்று முன்தினம் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தனது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நெகமம் அருகே தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சடையகவுண்டன்புதூரை சேர்ந்த மாரிமுத்து (45) ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இந்த விபத்தில் கீழே விழுந்த மாரிமுத்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு

ஆனைமலை அருகே உள்ள உடையகுளம், காட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது60). கூலிதொழிலாளி. இவர் கோடங்கிபாளையத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தாமரை குளம் பஸ் நிலையத்தில் இறங்கி தனது மனைவி ராஜம்மாளுடன் இரவில் கோடங்கிபாளையம் நோக்கி நடந்துசென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்ஆறுமுகத்திற்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவிபத்து ஏற்படுத்திய நல்லட்டி பாளையத்தைச் சேர்ந்த பொம்முராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்