சேத்தூரில் கால்நடை மருத்துவமனை கட்ட பூமி பூஜை
சேத்தூரில் கால்நடை மருத்துவமனை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதற்கான பணிகளை அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் கிராமப்பகுதிகளில் தலைமையாக கொண்டு கால்நடைகளுக்கு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குனர் ராஜராஜேஷ்வரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.