குடிநீர் குழாய்கள் அமைக்க பூமிபூஜை
தொப்பம்பட்டி அருகே குடிநீர் குழாய்கள் அமைக்க பூமிபூஜை நடந்தது.
தொப்பம்பட்டி அருகே 16புதூர் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்க பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத்தலைவர் பி.சி.தங்கம், 16புதூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.