ரூ.11¾ லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை

விஷமங்கலம் ஊராட்சியில் ரூ.11¾ லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை நடந்தது.

Update: 2022-11-17 18:08 GMT

கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விஷமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி தலைமை தங்கினார். கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முன்னிலை வகித்தார். கந்திலி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ. மோகன்ராஜ், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன், துணை செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் குலோத்துகன், ஆர். தசரதன், சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி வினோத், துணைத் தலைவர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்