ரூ.20 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா துர்கம் மலை கோவில் முன்பு ரூ.20 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆந்தேவனப்பள்ளி ஊராட்சி மல்லிகார்ஜூனா துர்கம் மலை கோவில் முன்பு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ராஜா (எ) தணிகாசலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிரிஷ், குந்துக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் மூர்த்தி, கோபி, ரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.