சாலை அமைக்க பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2022-12-07 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி கற்பக விநாயகர் நகர் பகுதியில் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.21.85 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் மற்றும் ரூ.10.97 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்