சாலை அமைக்க பூமி பூஜை
காவேரிப்பட்டணம் அருகே பையூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் ஊராட்சி இடைப்பையூர் கிராமத்தில் 2022-2023-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து சாலை அமைத்தல், தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது. அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் பெ.ரவி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் அண்ணாதுரை, விமல், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன், கூட்டுறவு இயக்குனர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா, மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.