ஊத்தங்கரை
ஊத்தங்கரை ஒன்றியம் புதூர்புங்கனை ஊராட்சி கோணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், வேடி, ஊத்தங்கரை நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய அவை தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.