ரூ.1¾ கோடியில் கட்டிடம் கட்ட பூமி பூஜை
பக்தர்கள் ஓய்வு எடுக்க ரூ.1¾ கோடியில் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
வலங்கைமான்:
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பில் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகை அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன்நாகை அறநிலையத்துறை உதவிகோட்டப்பொறியாளர் ஞானப்பிரகாசம், உதவி பொறியாளர் அமிர்தலிங்கம், கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தர்க்கார் தமிழ்மணி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், நகர செயலாளர் சிவனேசன், பேரூராட்சி துணைத்தலைவர் தனித்தமிழ் மாறன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் குமரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.