ரூ.25 லட்சத்தில் பாலம் கட்ட பூமி பூஜை
கோவில்பட்டியில் ரூ.25 லட்சத்தில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெரு பசும்பொன் நகரில் 15-வது நிதிகுழு மானியத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா. கருணாநிதி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.