குளம் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை
வேதாரண்யத்தில் குளம் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி வனதுர்கையம்மன் கோவில் அருகில் குளம் உள்ளது. இந்த குளம், கலைஞர் நகரப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.57.80 லட்சத்தில் மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர், படித்துறை உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, என்ஜினீயர் முகமது இப்ராஹிம், மாவட்ட தி.மு.க. மீனவரணியை சேர்ந்த ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் இமயா முருகையன், நடராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்துகொண்டனர்