புதிய சாலை பணிக்கு பூமி பூஜை

நாங்குநேரி அருகே வடக்கு இளையநயினார்குளத்தில் புதிய சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-07-14 18:45 GMT

இட்டமொழி:

நாங்குநேரி அருகே வடக்கு இளையார்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.40 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர் இனிகோ ஜெயதா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உன்னங்குளம் சுப்பிரமணியன், ஊராட்சி செயலர் மா.முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்