ஓமலூர்:-
காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்டகாப்பட்டி, ஆஞ்சநேயர் கோவில் ரோடு பகுதிகளில் தார்சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மணி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து நபார்டு நிதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் பூமிபூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் சுப்பிரமணியம், சேரன் செங்குட்டுவன், நகர செயலாளர் கணேசன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தர்ராஜன், பெரியேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சித்தேஸ்வரன், ஒன்றிய பேரவை செயலாளர் வெங்கடேசன், நகர பேரவை செயலாளர் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கநாதன், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், நாகப்பன், வெங்கடாசலம், பேரூராட்சி கவுன்சிலர்கள் வேலன், மணிகண்டன், மேகலா, மாதம்மாள், குப்புசாமி, சாந்தி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.