கயத்தாறு பேரூராட்சியில் ரூ.80 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைக்கு பூமிபூஜை
கயத்தாறு பேரூராட்சியில் ரூ.80 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைக்கு பூமிபூஜை நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியில் ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு சாலைப்பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.