பீமேஸ்வரசாமி கோவில் குடமுழுக்கு

கீழ்வேளூர் அருகே பீமேஸ்வரசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-08-29 16:08 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் அபிராமி அம்மாள் சமேத பீமேஸ்வர சாமி கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக. கடந்த 27-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கோவில் ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல வேதாரண்யத்தை அடுத்த கைலவனம்பேட்டை கிராமத்தில் ஊர்குளம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 24-ந் தேதி கணபதி ஹோமம், லெட்சுமி பூஜையுடன், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம்புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டுகுடமுழுக்கு நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்