பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவைக்கூட்டம்
பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவைக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப்பேரவையின் 46-வது முழுநிலவுக்கூட்டம் அதன் தலைவர் வேல்.இளங்கோ தலைமையில் நடந்தது. பொருளாளர் செம்பியன், புரவலர் கவின்கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தமிழ்க்குமரன், பாவேந்தரின் தமிழும்-இயற்கையும் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக செயலாளர் ஓவியர் முகுந்தன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.