பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மீனவர்கள் கவனமாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

Update: 2022-11-12 22:39 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணை பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மீனவர்கள் கவனமாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் மேல்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் யானைகள் பெரும்பாலும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து கும்மாளம் அடித்து செல்லும். மற்ற வன விலங்குகள் வனப்பகுதியில் இருக்கும் குட்டையிலேயே தண்ணீரை குடித்து தாகம் தணித்துக்கொள்ளும்.

பாய்ந்து சென்ற சிறுத்தை

இந்தநிலையில் நேற்று முன்தினம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது அணை பகுதியில் இருந்து காட்டுக்குள் ஒரு சிறுத்தை பாய்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் சிறுத்தையை செல்போனிலும் படம் பிடித்தார்கள்.

இதுகுறித்து வனத்துறை ஊழியர் சிவக்குமார் என்பவர் கூறும்போது, 'அணையின் மேல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தெரியவந்துள்ளது. எனவே அணையில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்