பவானிநகராட்சி அலுவலகம் முன்புதுணைத்தலைவர் திடீர் தர்ணா

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு துணைத்தலைவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Update: 2023-09-28 20:26 GMT

பவானி நகராட்சி துணைத்தலைவராக இருப்பவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மணி. இவர் நேற்று முன்தினம் பவானி நகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் பொதுமக்கள் சிலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் போலீசார், நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று துணைத்தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது அவர் கூறும்போது, 'எனது வார்டில் குடிநீர் திட்ட பணிகளுக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது ஏற்கனவே போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்களில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் வர்ணபுரம் 3 மற்றும் 4-வது வீதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்து தரவேண்டும்' என்றார்.

அதற்கு அதிகாரிகள், 'இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சீரமைத்து தரப்படும்' என்றனர். மணி அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்