பவானி நகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கிய தள்ளுவண்டிகளில் பாவானி என எழுதியதால் பரபரப்பு

பவானி நகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கிய தள்ளுவண்டிகளில் பாவானி என எழுதியதால் பரபரப்பு

Update: 2023-10-04 22:48 GMT

பவானி

பவானி நகராட்சியில் மத்திய அரசின் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி திட்டத்தின் கீழ் பவானியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கி தள்ளுவண்டிகளை வழங்கினார்.

இவ்வாறு வழங்கப்பட்ட வண்டிகளில் பவானி நகராட்சி என்பதற்கு பதில் பாவானி நகராட்சி என எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரின் பெயரை மாற்றி தவறுதலாக எழுதப்பட்ட வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கியதற்கு பவானி நகர பா.ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்