சிவகங்கை
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பாரதி விழா கிளை தலைவர் சுந்தர மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் யுவராஜா வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், சாம்பவிகா பள்ளி தாளாளர் சேகர், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்சிம்மா, தொழில் அதிபர் பாண்டிவேல், தமிழ் சங்க நிறுவனர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்களுக்கு பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் மதிவாணன் நன்றி கூறினார்.