பாரதீய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
கடலூரில் பாரதீய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
கடலூர்
பாரதீய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 14-வது கடலூர் கோட்ட மாநாடு கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் திருமலைசாமி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் பாலாஜி, சதிஷ்குமார், ராஜேந்திரன், மாநில உதவி செயலாளர்கள் நசீர், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் தனசேகரன் வரவேற்றார். பொதுச்செயலாளர் விமேஸ்வரன் சங்க கொடியை ஏற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் ரமேஷ், கோட்ட செயலாளர்கள் தம்பிராஜ், ராகவன், அகில இந்திய உதவி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாகன பயணப்படி தர வேண்டும். சீருடைக்கான படியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.