பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆற்காடு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் வேதகிரி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரசார குழு பொறுப்பாளர் மனோகரன், முருகன் மாவட்ட செயலாளர்கள் எழில், குணநீதி, ஹேமாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெறக் கூடாது, செம்பேடு ஊராட்சி ஒழலை கிராமத்தில் கட்டப்பட்ட 35 மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் கால்வாய் சரிந்து விழுந்து விட்டது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தரமான சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய்கள் அரசின் வழிகாட்டும் முறைகளுடன் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.