பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்

பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-16 15:24 GMT

பாரதீய ஜனதா கட்சியின் வேடசந்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில், எரியோடு பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை தமிழ அரசு திரும்ப பெற வேண்டும். கோவிலூரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை மற்றும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்