பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கல்லிடைக்குறிச்சியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-28 19:52 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில் சொத்துக்களை மீட்டெடுக்க கோரி சேரன்மாதேவி மேற்கு மண்டல பா.ஜனதா சார்பில் கல்லிடைக்குறிச்சி ெரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டல தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி மேற்கு மண்டல பொதுச் செயலாளர் மாரியப்பன், நகர பொதுச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

இதில் சேரன்மாதேவி மேற்கு மண்டல பார்வையாளர் தங்கேஸ்வரன், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்