பாரதியார் பிறந்த நாள் விழா
கடையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது
கடையம்:
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் நடைபெற்றது. இதையொட்டி திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக செல்லம்மாள் பாரதி திருவுருவச் சிலைக்கு திருவள்ளூர் கழக தலைவர் சேதா ராமலிங்கம், செயலாளர் கல்யாணி சிவகாமி நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் மாடசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆழ்வார்குறிச்சி கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளி செயலாளர் சுந்தரம் செல்லம்மாள் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து குத்து விளக்கு ஏற்றினார்.
கடையம் பாரதி அரிமா சங்கத்தின் சார்பாக முருகன், குமரேசன், இந்திரஜித், கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். கடையம் முத்தமிழ் கலா மன்ற அமைப்பாளர் கலையரசன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மன்னன், கல்லூரி பேராசிரியர் கல்யாண ராமன், கல்யாண சுந்தரம், ராமானுஜம் ஓய்வு பெற்ற தாசில்தார் சின்னச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார் செய்திருந்தார்.