பாரதியார் பிறந்த நாள் விழா
கோவில்பட்டியில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பாரதியார் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. பாரதியார் உருவப்படத்திற்கு நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தாமோதரன், வக்கீல் சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி மாரியப்பன், பழனி குமார் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.