பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை நியமித்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-08 19:15 GMT

வடவள்ளி,செப்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை நியமித்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறியதாவது:-

இதுவரை உள்ள மரபுகளை மீறி கவர்னர் புதிதாக யு.ஜி.சி.சார்பில் உறுப்பினரை நியமித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக விதிகளை மீறியும், தமிழக கல்வி அமைச்சரை ஆலோசிக்காமலும் அவர் தன்னிச்சையாக உறுப்பினரை நியமித்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.

தமிழகத்தில் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு பல்வேறு பல்கலைக்கழகங்களில் காத்திருக்கின்றனர்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்காமல் கவர்னர் ரவி தாமதப்படுத்தி வருகிறார். மாணவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். துணைவேந்தர் தேடுதல் குழுவில் உள்ள யு.ஜி.சி.உறுப்பினரை திரும்ப பெற வேண்டும் என்றனர். முன்னதாக அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்