'பாரத மாதா பக்தர்கள் மாநாடு'

இந்து மக்கள் கட்சி சார்பில் ‘பாரத மாதா பக்தர்கள் மாநாடு' நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2023-06-17 15:00 GMT

இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக இளைஞர்களுக்கு தேசபக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில், வருகிற ஆகஸ்டு 14-ந்தேதி பழனியில் 'பாரத மாதா பக்தர்கள் மாநாடு' நடைபெறுகிறது. இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் துர்பாக்கியமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நீக்கி இருக்க வேண்டும். இந்த வழக்கு என்பது சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இதில் சட்டம் தன் கடமையை செய்கிறது.

பொதுசிவில் சட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட இணைய தளத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கருத்துகள் பதிவு செய்யப்படும். இந்த சட்டம், எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. இதுபற்றி தவறான பிரசாரத்தை எதிர்கட்சியினர் செய்கின்றனர். லஞ்சம், ஊழலுக்கு எதிராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் நடைபயணத்துக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்