சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2022-09-17 18:45 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் ேகாவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி நடைபெற்றது. சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்